நிறைவேறுமா தேவயானியின் சபதம்!!

606

Devyani11என் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை என சட்டப்படி நிரூபிப்பேன் என்று தேவயானி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்திய துணைத் தூதராக பணிபுரிந்த தேவயானியை விசா மோசடி மற்றும் பணிப்பெண்ணுக்கான சம்பள மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி அமெரிக்க பொலிசார் கைது செய்தனர்.

ஜாமீனில் விடுதலையான அவர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவரை பாதுகாக்க இந்திய அரசு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே தேவயானியை துணைத் தூதர் பெறுப்பில் இருந்து நீக்குமாறு இந்தியாவுக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்தது. அதற்கு இந்தியா மறுத்து விட்டதால் தேவயானியை நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டது.

இதையடுத்து அமெரிக்காவில் இருந்து இந்தியா புறப்பட்ட தேவயானி நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் டெல்லி விமான நிலையம் வந்து சேர்ந்தார்.

விமான நிலையத்தில் அவரை தந்தை கோபர்கடே மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர். நாடு திரும்பிய தேவயானிக்கு டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேவயானி டெல்லி திரும்பினாலும் அவரது குழந்தைகள் அமெரிக்காவில் படிப்பதால் அவர்களும் குடும்பத்தினரும் தொடர்ந்து நியூயோர்க்கில் தங்கியுள்ளனர்.தேவயானி மட்டும் டெல்லி திரும்பியுள்ளார்.

இதுகுறித்து நியூயோர்க்கில் தேவயானி கருத்து கூறுகையில் என் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை, ஆதாரமற்றவை. அவை தவறு என சட்டப்படி நிரூபிப்பேன் என்று கூறியுள்ளார்.

பின்னர் டெல்லி திரும்பிய தேவயானி நிரூபர்களிடம் கூறுகையில், எனக்காக குரல் கொடுத்து ஆதரவு அளித்த மத்திய அரசுக்கும், நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.