7வது ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ், ராஜஸ்தான் றொயல்ஸ் ஆகியவை தலா 5 வீரர்களை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.
7வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 12ம் திகதி நடக்கிறது. இதில் அனைத்து வீரர்களும் புதிதாக ஏலம் விடப்படுகிறார்கள்.
அதே சமயம் ஒவ்வொரு அணிகளும் அதிகபட்சமாக தங்கள் அணியில் முந்தைய சீசனில் விளையாடிய 5 வீரர்களை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு அணியும் வெளியிட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
மகேந்திரசிங் டோனி, அஸ்வின், ஜடேஜா, பிராவோ, ரெய்னா
மும்பை இண்டியன்ஸ்
ரோகித் ஷர்மா, மலிங்க, ராயுடு, ஹர்பஜன்சிங், பொலார்ட்
ராஜஸ்தான் ரோயல்ஸ்
வட்சன், அஞ்சு சாம்சன், பின்னி, ரஹானே, ஃபால்க்னர்
ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர்
கோலி, டிவில்லியர்ஸ், கெய்ல்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
ஸ்டெய்ன், தவான்
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
டேவிட் மில்லர், வோரா
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கௌதம் கம்பீர், நரைன்
டெல்லி டார்டெவில்ஸ் எந்தஒரு வீரரையும் தக்கவைக்க விரும்பவில்லை என்றும், புதிதாக ஓர் அணியை தெரிவுசெய்யப் போவதாகவும் அறிவித்துள்ளது.





