இராமகிருஷ்ணன் சுகந்தன்

நமது நாட்டில் பல்வேறு கலைஞர்கள் உள்ள போதும் அவர்களில் அதிகமானோரின் திறமைகள் இலைமறை காயாகவே இருந்து வருகின்றன. சந்தர்ப்பமும் அதிஷ்டமும் ஒன்று சேரும் போதுதான் இவ்வாறானவர்களின் திறமைகள் வெளி உலகுக்குத் தெரியவருகின்றன.

ஊடகங்களின் பார்வையில் பட்டுவிடும் திறமைசாலிகள் உலகின் வெளிசத்துக்கு வந்து, அடையாளங்களையும் பெற்றுவிடுகின்றனர்.

அந்தவகையில் நமது பார்வையில் சிக்கிய வவுனியா குருமன்காடு பிரதேசத்தைச் சேர்ந்த வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவனான இராமகிருஷ்ணன் சுகந்தன் எனும் கலைஞரின் திறமையினை வெளிக்கொணர்வதில் வவுனியா நெற் இணையத்தளம் மகிழ்ச்சியடைகிறது.

ஒரு புகைப்படத்தினைப் பார்த்தால் அதனை அப்படியே போட்டோபிரதி எடுப்பது போல அச்சுஅசலாக வரைவதுதான் சுகந்தனின் அசாத்திய திறமை. ஓவியம் வரைவது தவிர சுகந்தன் வர்ணம் பூசுதலிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகின்றார்.

இவருக்கு வவுனியா நெற் இணையத்தள வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இவரை வாழ்த்த விரும்புபவர்கள் 0771017066 இலக்கத்திற்கு தொடர்புகொண்டு வாழ்த்துங்கள். இவரது புகழ் பரவ இச் செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.






