ஷகிலாவின் சுயசரிதையில் வெளியாகும் பரபரப்பு தகவல்கள்!!

452

Shakila

மலையாள கவர்ச்சி நடிகை ஷகிலா தனது வாழ்க்கை வரலாற்றை சுயசரிதையாக எழுதியுள்ளார்.

ஒரு காலத்தில் மலையாளத் திரையுலகை தனது கவர்ச்சியால் கலக்கிய ஷகீலா இன்று சின்னச் சின்ன கொமடி வேடங்களில் நடித்துவருகின்றார்.

இந்நிலையில் அவர், தனது வாழ்க்கை வரலாற்றை சுயசரிதையாக எழுதியுள்ளார். ஒலிவ் புக்ஸ் வெளியிட்டுள்ள அந்த நூலில் பல சுவாரஸ்யத் தகவல்களைக் கூறியுள்ளார்.

அதில் பிரபல நடிகை ஒருவரின் தம்பி தன்னை தீவிரமாக காதலித்ததாகவும், ஆனால் திடீரென பாதியிலேயே தன்னைக் கைகழுவி விட்டதாகவும் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் மலையாள உலகில் தனக்கு ரொம்பப் பிடித்த ஹீரோ திலீப் என்றும் அவருடன் ஒரு காட்சியிலாவது இணைந்து நடிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன் ஆனால் அது நிறைவேறவில்லை எனவும் கூறியுள்ளார்.

இந்த நூல் தனது உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.