
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு நடனமாடியுள்ளார் ஈரான் கவர்ச்சி நடிகை மரியம் ஸ்காரியா.
இவர் தமிழில் சுந்தர்.சி. இயக்கிய நகரம் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அந்த பாடல் பெரிய அளவில் ஹிட்டாகாததால் இவர் தமிழ் நாட்டில் பிரபலமாகமால் போய்விட்டார். இருந்தாலும் பொலிவுட்டில் குத்துப்பாடல்களுக்கு நடனமாடுவதில் முன்னணி நடிகையாகியுள்ளார்.
சூர்யா நடிக்கும் இந்த படத்தில் படுகவர்ச்சியான உடையில் குத்தாட்டம் போட்டுள்ள இவர், சூர்யாவுடனும், லிங்குசாமியுடனும் நெருங்கி பழகிவிட்டாராம். இதுகுறித்து அவரிடம் கேட்கும்போது..
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் குத்தாட்டம் ஆட என்னிடம் கேட்டார்கள். சந்தோஷமாக ஒப்புக்கொண்டேன். சூர்யாவுடன் ஆடியபோது நாம் வேலை செய்கிறோம் என்ற சோர்வே தெரியவில்லை. அவர் என்னிடம் ரொம்பவும் நட்பாக பழகினார். இவருடம் ஆட்டம் போட்டபோது அவருடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையும் உண்டாயிற்று என்று கூறினார்.





