அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மேலும் உயர்வடையக் கூடும்!!

1219

Priceஅத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகள் மேலும் உயர்வடையக் கூடுமென மொத்த வியாபாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பருப்பு, சீனி, கருவாடு, நெத்தலி, பயறு, கடலை, வெங்காயம் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான விலை உயர்வடையக் கூடும் என மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் பழனியாண்டி சுந்தரம் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி பத்து வீத்த்திலிருந்து பன்னிரெண்டு வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் செஷ் வரியும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் இந்த மாதம் 1ம் திகதி தொடக்கம் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொருட்களுக்கான விலைகள் உயர்வடையும் என பழனியாண்டி சுந்தரம் தெரிவித்துள்ளார்.