மேல்,தென் மாகாண சபைகள் கலைப்பு!!

587

Sothernஇலங்கையின் மேல் மற்றும் தென்மாகாண சபைகள் நேற்று நள்ளிரவு கலைக்கப்பட்டுள்ளன. விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த மாகாணசபைகள் கலைக்கப்பட்டுள்ளன.

இதன்படி எதிர்வரும் மார்ச் மாத நடுப்பகுதியில் இந்த மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு மாகாணசபைகளும் இதுவரை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சியின் கீழ் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.