தை மாத ராசி பலன்கள் – கன்னி!!

422

kanni

எதிர்மறை எண்ணங்களுடன் வருபவர்களை ஆற்றுப் படுத்தி நேர்வழியில் கொண்டு செல்பவர்களே பனியா, வெயிலா என்று பார்க்காமல் என்கடன் பணி செய்து கிடப்பதே என்று இடைவிடாமல் உழைப் பவர்களே உங்களின் தன, பாக்யாதிபதியும், பிரபல யோகாதிபதியுமான சுக்கிரன் வக்ரமாக இருந்தாலும் 4ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் ஓரளவு பணவரவு உண்டு. பழைய பிரச்னைகள், சிக்கல்களை தீர்க்க வழி கிடைக்கும். ராசியிலேயே செவ்வாய் நிற்பதால் ரத்தத்தில் இரும்புச் சத்து குறையும். நோய் எதிர்ப்பு சக்தியும் உடலில் குறையும்.

சூரியன் 5ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளின் வருங்காலம் குறித்து கவலைகள் வந்துபோகும். ஆனால், புதன் 5ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்து கொள்வீர்கள். பூர்வீகச் சொத்து விஷயத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். கேது 8ல் மறைந்திருப்பதால் பயணங்கள் அதிகமாகும். கனவுத் தொல்லையும் வந்துபோகும். தெரிந்தே சிலரிடம் ஏமாறுவீர்கள். சந்தேகத்தாலும், பழைய பிரச்னைகளாலும் கணவன்-மனைவிக்குள் பிரிவு வரக்கூடும். பிள்ளைகள் முன்னிலையில் சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள்.

அரசியல்வாதிகளே மக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கட்சித் தலைமையும் உங்களுடைய சாதனைகளை அங்கீகரிக்கும். கோஷ்டிப் பூசலுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். மாணவர்களே டி.வி பார்க்கும் நேரத்தை குறைத்துக் கொள்ளுங்கள். ஏழரைச் சனி நடைபெறுவதால் எல்லாம் படித்து முடித்து விட்டோம் என்று நினைக்காதீர்கள். மறதி அதிகமாகும். பாடங்களின் கடினமான பகுதிகளை எழுதிப் பார்ப்பது நல்லது.

கன்னிப் பெண்களே நல்லவர்களின் நட்பு கிடைக்கும். உயர்கல்வியில் முன்னேறுவீர்கள். திருமண விஷயத்தில் இப்போது அவசரம் வேண்டாம். வெளிமாநிலம், மாவட்டத்தில் வேலை கிடைத்தாலும் ஏற்றுக் கொள்ள தயாராகுங்கள். வியாபாரத்தில் ரியல் எஸ்டேட், இரும்பு, வாகனம், துரித உணவுகளால் லாபமடைவீர்கள்.

பழைய கடன்கள் ஓரளவு வசூலாகும். கோபப்பட்ட பங்குதாரர் அனுசரணையாக நடந்து கொள்வார். கடை வாடகை அதிகமாகிக் கொண்டே போகிறதே கடன் ஏதாவது வாங்கி சொந்த இடம் பார்க்கலாமே என்ற முடிவுக்கு வருவீர்கள். வேலையாட்களின் விடுப்பால் நீங்கள் இறங்கி வேலை செய்ய வேண்டியது வரும். உத்யோகத்தில் குரு 10ல் தொடர்வதால் ஒரு நிலையற்றபோக்கு காணப்படும்.

விரும்பத்தகாத இடமாற்றங்கள் வரும். ஆனாலும், சுக்கிரன் 10ம் வீட்டை பார்த்துக் கொண்டிருப்பதால் மேலதிகாரியில் ஒருவர் உங்களை எதிர்த்தாலும் மற்றொருவர் உங்களை ஆதரிப்பார். சக ஊழியர்களும் உங்களுடைய சங்கடங்களை புரிந்துகொண்டு உதவுவார்கள். விவசாயிகளே பூச்சித் தொல்லையால் மகசூல் குறையும். பக்கத்து நிலத்துக்காரரை பகைத்துக் கொள்ளாதீர்கள். கலைத்துறையினரே சம்பளபாக்கி கைக்கு வரும். சக கலைஞர்களுடன் இருந்த மோதல்கள் நீங்கும். விரைந்து செயல்பட்டு வெற்றிகளை வசமாக்கும் மாதமிது.

ராசியான திகதிகள் :
ஜனவரி : 14, 15, 16, 17, 24, 25, 26, 27, 29
பெப்ரவரி : 3, 4, 11, 12

சந்திராஷ்டம தினங்கள்: பெப்ரவரி 5ம் திகதி காலை 10 மணி முதல் 6 மற்றும் 7ம் திகதி மாலை 5 மணி வரை பயணங்களின்போது கவனம் தேவை.

பரிகாரம் : சுயம்புநாதரை தரிசித்துவிட்டு வாருங்கள்.