
கடந்த 9ம் திகதி லண்டனின் பிரென்ட் நகரில் தனது இரு குழந்தைகளையும் கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட இலங்கைத் தமிழ்ப் பெண் தொடர்பான தகவல்கள் ஊடகங்களில் வெளியாகிருந்தது.
இந்நிலையில் அக்குடும்பத்தினர் இறுதியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
இப்புகைப்படத்தில் வல்வெட்டித்துறை நெடிகாட்டினைச் சேர்ந்த சக்திவேல் வாகீஸ்வரன், இறந்த மனைவி ஜெயவாணி, அவர்களது இறந்த குழந்தைகளான அனோபன், நதீபன் ஆகியோர் காணப்படுகின்றனர்.
இவர்களின் பரிதாப மரணம் தற்கொலை என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை நடத்திவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.





