6 வருடங்களுக்கு பின்..

6 வருடங்களுக்கு பின் அமெரிக்காவில் இருந்து வீடு திரும்பிய மருமகளை, உறங்கிக்கொண்டிருக்கும் போது பூத்தொட்டியால் அ டித்து கொ லை செய்த மாமியாரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 55 வயதான ஆனந்தி என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன் ரியா(35) என்கிற இளம்பெண்ணை தன்னுடைய மகன் ரோஹனுக்கு மணமுடித்து வைத்துள்ளார்.

திருமணத்திற்கு முன்புவரை ரியா செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். ஆனால் இது ஆனந்திக்கு சுத்தமாக பி டிக்கவில்லை என தெரிகிறது. மேலும் ரியாவின் பெயர் பிடிக்கவில்லை எனக்கூறி, அதனை சுவாதி என மாற்றிக்கொள்ளுமாறும் ஆனந்தி தொ ந்தரவு செய்துள்ளார்.

இதனால் ரியா தன்னுடைய செவிலியர் வேலையை விட்டு, எம்.பி.ஏ படிப்பதற்காக கணவருடன் அமெரிக்கா சென்றுள்ளார். படிப்பை முடித்துவிட்டு இருவரும் கடந்த 6 வருடங்களாக அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் வேலை செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் டிசம்பர் 1ம் திகதியன்று தம்பதியினர் இருவரும் இந்தியாவிற்கு மீண்டும் திரும்பியுள்ளனர். பல நேரங்களில் ஆனந்தி தன்னுடைய 6 மாத பேரக்குழந்தையை கொஞ்ச முயன்றுள்ளார். ஆனால் ரியா அதற்கு த டையாகவே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை 6 முதல் 8 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் குடும்பத்தை சேர்ந்த அனைவரும் நடைப்பயிற்சிக்காக வெளியில் சென்றுள்ளனர்.

ரியா மட்டும் அறையில் தன்னுடைய குழந்தையுடன் உறங்கிக்கொண்டிருந்துள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஆனந்தி, இரும்பு பூத்தொட்டியால் ரியாவின் த லையில் மீண்டும் மீண்டும் தா க்கிக்கொண்டே இருந்துள்ளார்.

இதில் ரியா இ றந்துவிட்டார் என்பது உறுதியான பின்னரே தன்னுடைய தா க்குதலை நிறுத்தியுள்ளார். பின்னர் நேரடியாக பொலிஸ் நிலையம் சென்று, மருமகளை கொ லை செய்துவிட்டேன் எனக்கூறி ச ரணடைந்துள்ளார்.

தனது மகனையும், பேரக்குழந்தையையும் தன்னிடம் இருந்து பிரிக்க முயற்சி செய்ததாலே ரியாவை கொ லை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், ரியாவின் உ டலை பி ரேத ப ரிசோதனை அனுப்பிவிட்டு வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




