வவுனியாவில் புதையல் அகழ்ந்த ஐவர் கைது!! (படங்கள்)

863

வவுனியா, மகாகச்சக்கொடி பிரதேசத்தில் உள்ள புராதன விகாரைக்கு அருகாமையில் புதையல் அகழ்ந்த ஐவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புராதன விகாரைப் பகுதியில் அமைந்துள்ள பகுதியில் பற்றைக்காடுகள் காணப்பட்ட நிலையில் அங்கு மறைவாக இருந்து புதையல் அகழ்ந்த போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமாக சிலர் புராதன விகாரை அமைந்துள்ள பகுதிக்கு சென்று வருவதை அவதானித்த அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்தே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

11 12 13