வவுனியா – திருநாவற்குளம் 3 ஆம் ஒழுங்கை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
தையலகம் ஒன்றினை நடத்திவரும் 56 வயதுடைய இராமன் விஜயகுமாரன் என்பவரே தனது வீட்டு வளவில் உள்ள கடையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனது கணவர் நேற்று இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்து தன்னுடனும் பிள்ளையுடனும் சச்சரவில் ஈடுபட்டதாக மனைவி தெரிவித்தார்.
இதன் காரணமாக தானும் மகனும் வீட்டில் இருந்து வெளியேறி மற்றொரு வீட்டில் தங்கியிருந்து இன்று காலை வீட்டிற்குச் சென்று கணவனை காணாது தேடிய போது கடைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதாக மனைவி மேலும் தெரிவித்தார். இம் மரணம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





