சர்வதேச பொலிஸார் தேடும் தமிழர் பொலிஸ் நிலையம் சென்று மாட்டிக்கொண்டார்!!

601

Tamilar

பயங்கரவாத குற்றச்சாட்டில் சர்வதேச பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ள தமிழர் ஒருவர் பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸின் – பெரிஸில் உள்ள பொலிஸ் நிலையமொன்றுக்கு முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யச் சென்ற வேளை குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 35 வயதான ஜயநாதன் தர்மலிங்கம் கடந்த வியாழக்கிழமை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத வேலை வாய்ப்பு தொடர்பான விடயத்தில் பொலிஸில் முறைப்பாடு சென்ற சமயத்தில் பொலிஸார் இவரை உடனடியாக அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜயநாதன் தர்மலிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்டுவரும் நபர்கள் பட்டியலில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் இலங்கை கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்தவராவார்.