பொலிஸ் வாகனம் மீது ஏறி குதித்த ராகுல் காந்திக்கு சிக்கல்!!

582

Rahul

பொலிஸ் வாகனம் மீது ஏறிக் குதித்த காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேரள பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கடந்த திங்கட்கிழமை அன்று கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள நூரநாட்டில் நடந்த பாதயாத்திரையில் கலந்து கொண்டார்.

அப்போது அங்கு கட்சியினர் கூடி ராகுல் காந்தியை பார்க்க முண்டியடித்தனர். இதையடுத்து ராகுல் பொலிஸ் வாகனத்தின் மீது ஏறிக் கொண்டு கட்சியினரை பார்த்து கையசைத்தார்.

இந்நிலையில் ராகுல் காந்தி மீது தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் முஜீப் ரஹ்மான் நூரநாடு பொலிசில் புகார் கொடுத்துள்ளார். அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது,

ராகுல் காந்தி மோட்டார் வாகன சட்டத்தின் பிரிவு 123 ஐ மீறிவிட்டார். அதனால் அவர் மீது பொலிசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் பொலிஸ் வாகனத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

மேலும் பொதுமக்களுக்கு இடையூறாக போக்குவரத்து நெரிசலை எற்படுத்தியுள்ளார் என்று அதில் தெரிவித்துள்ளார். ஆனால் முஜீபின் புகாரின்பேரில் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று பொலிசார் தெரிவித்தனர்.