நடு வீதியில் குளித்து ஆசிரியை நூதன போராட்டம்!!

524

UK

பாதை சேதமடைந்துள்ளது என்பதை உணர்த்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆசிரியை ரோசி மோர்சன் வித்தியாசமான போராட்டம் ஒன்றை மேற்கொண்டார்.

இவர் சமீபத்தில் சமுதாய சேவை பணிக்காக தென்னாபிரிக்காவுக்கு சென்றார். அப்போது அவர் பயணம் செய்த கிராமப்புற சாலைகள் படுமோசமாக கிடப்பதை கண்டார்.

ஒரு இடத்தில் சாலையில் நடுவே பெரிய பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் நிரம்பி நின்றது. இந்த அவலநிலையை பிறருக்கு அம்பலப்படுத்த அவருக்கு ஒரு எண்ணம் உதயமானது.

நடு வீதியில் தேங்கி நின்ற தண்ணீரில் அவர் படுத்து உருண்டு குளியல் போட்டு அதை படமும் பிடித்தார். பிறகு இங்கிலாந்து திரும்பியது அந்த காட்சியை இணையதளத்தில் வெளியிட்டு தான் கண்ட சாலை அவலங்களையும் விவரித்து கருத்து வெளியிட்டார்.

குண்டும், குழியுமான சாலைகளால் 20 நிமிடத்தில் பயணிக்க வேண்டிய தூரத்தை கடக்க 1¼ மணிநேரத்தை செலவிட்டேன் என்று குறிப்பிட்டார்.