ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட ஒரே இலங்கை வீரர் இவர் தான் : எவ்வளவு தொகைக்கு தெரியுமா?

625

இசுரு உதான

2020ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடருக்கான ஏலம் நேற்று நடைபெற்ற நிலையில் இதில் இலங்கையை சேர்ந்த ஒரு வீரர் மட்டும் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் டி20 தொடரின் 13ஆவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதில் பங்கேற்கும் வீரர்களின் ஏலம் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற நிலையில் மொத்தமாக 62 வீரர்கள் ஏலத்தில் வாங்கப்பட்டனர்.

இந்த 62 பேரில் 29 வெளிநாட்டு வீரர்களும் அடக்கமாகும். இவர்கள் மொத்தமாக ரூ 140.3 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர். ஏலத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் இசுரு உதானவை பெங்களூர் ராயல் சேலன்ஜர்ஸ் அணி ரூ 50 லட்சம் கொடுத்து தங்கள் அணிக்கு வாங்கியது. இதை தவிர வேறு இலங்கை வீரர்கள் நேற்று ஏலத்தில் எடுக்கப்படவில்லை.