வாகனங்கள்..

இலங்கையில் வாகனங்களின் விலை பாரியளவில் அதிகரிக்கக் கூடும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

புதிய அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள புதிய சொகுசு வரி காரணமாக இந்த நிலையமை ஏற்பட கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கார்கள், ஜுப்கள் உட்பட பல வாகங்களின் விலை அதிகரிக்க கூடும் என சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

75000 ரூபாயில் இருந்து ஒரு மில்லியன் ரூபாய் வரை வாகனங்களின் விலை அதிகரிக்க கூடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




