வர்த்தக நிலையம்..
வவுனியா குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள சிசிரீவி விற்பனை நிலையம் நேற்று (22.12.2019) இரவு திடிரென தீப்பற்றி இருந்துள்ளது.
வர்த்தக நிலையத்திற்குள் இருந்து புகை வருவதனை அவதானித்த பொதுமக்கள் வர்த்தக நிலைய உரிமையாளருக்கு தகவல் வழங்கியிருந்ததுடன் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கும் தகவல் வழங்கியிருந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா நகரசபையின் தீயணைப்பு பிரிவினர் பலமணி நேர போ ராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட த டவியல் நிபுணத்துவ பொலிஸார் அடங்கிய குழுவினர் இன்று (23.12.2019) காலை சம்பவ இடத்திற்கு வருகை தந்து மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தீ விபத்து காரணமாக வர்த்தக நிலையத்திலிருந்த பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.