மத்திய ஆபிரிக்க குடியரசு நாட்டில் சமீபத்தில் மதக்கலவரம் ஏற்பட்டது. அதில்,1000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இந் நிலையில் தலைநகர் பெங்குயியில் நடந்த கலவரத்தில் கிறிஸ்தவர் ஒருவரின் கர்ப்பிணி மனைவி அவரது கணவனின் தங்கை மற்றும் குழந்தை ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.
இதனால் அந்த நபர் கடும் ஆத்திரத்துடன், வெறியுடன் இருந்தார். தனது மனைவி மற்றும் குடும்பத்தினரை கொன்றவரை பழிக்கு பழிவாங்க காத்திருந்தார்.
இந்த நிலையில் அவரது மனைவியை கொன்றவர் ஒரு பஸ்சில் புறப்பட்டு சென்றதை அறிந்தார். உடனே, தனது ஆதரவாளர்கள் 20 இளைஞர்களை திரட்டி கும்பலாக சென்றார்.
பின்னர் அந்த பஸ்சை வழி மறித்து நிறுத்தினார். தனது மனைவியை கொடூரமாக கொன்ற அந்த நபரை பஸ்சில் இருந்து வெளியேற்றினார்.
அவரை தெருவில் தரதர வென இழுத்து வந்து கத்தியால் குத்தி கொன்றார். அதை தொடர்ந்து அந்த நபரின் உடலை தீ வைத்து எரித்தார். இருந்தும் அவரது ஆத்திரம் தீரவில்லை. கொலை செய்யப்பட்ட நபரின் கால் மாமிசத்தை தின்று தனது பழிவாங்கும் வெறியை தணித்துக் கொண்டார்.
கொடூரமாக நடந்து கொண்ட அவர் தனக்கு தானே ‘‘பைத்தியக்கார நாய்’’ என பெயரிட்டு கொண்டார்.