
நடிகர் விஜய்யை வைத்து கலைப்படமோ குடும்பப்படமோ எடுக்க முடியாது என, ஜில்லா படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி தெரிவித்துள்ளார்.
ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் விஜய், மோகன்லால் நடித்த ஜில்லா படம் கடந்த 10ம் திகதி வெளியாகி வசூலை குவித்துக் கொண்டிருக்கிறது.
படம் கேரளாவில் வசூலில் புதிய சாதனையே படைத்துள்ளது. இந்நிலையில் ஜில்லா வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஆர்.பி. சௌத்ரி கூறுகையில்..
விஜய்யை வைத்து படம் எடுக்கையில் அவருக்கு இருக்கும் ஏராளமான இரசிகர்களையும் மனதில் வைத்து தான் படம் எடுக்க வேண்டும். அவரின் இரசிகர்களை திருப்திபடுத்துவது மிகவும் முக்கியம்.
விஜய்யை வைத்து கலைப் படமோ, குடும்ப படமோ எடுக்க முடியாது. ஏனென்றால் அத்தகைய படங்களில் விஜய் நடித்தால் அதை அவரது இரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
இரசிகர்களை திருப்திபடுத்த விஜய்யை வைத்து கமர்ஷியல் படங்கள் மட்டும் தான் எடுக்க முடியும். ஜில்லா படம் வெற்றி பெற்றதில் எனக்கு மகிழ்ச்சி என்றார்.





