“துளிர்விடும் துயரங்களும் நம்பிக்கைகளும்” கவிதைநூல் வெளியீட்டு விழா!!(படங்கள்)

1250

வெற்றிச்செல்வி (செல்வி வேலு சந்திரகலா) அவர்களின் துளிர்விடும் துயரங்களும் நம்பிக்கைகளும் கவிதைநூல் தை மாத முழுநிலா நாளன்று நேற்று (15.01.2014) மன்னார் கலையருவி மண்டபத்தில் நடைபெற்றது.

மன்னார் எழுத்தாளர் பேரவையினர் ஒழுங்குபடுத்திய இன் நிகழ்வு, மன்னார் தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் துரையூரான் திரு.எம்.சிவானந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் முதல் பிரதியை யாழ் பல்கலைக்கழக தமிழ்த்துறை பகுதிநேர விரிவுரையாளர் திரு.ம.ந.கடம்பேஸ்வரன் (காப்பியதாசன்) அவர்கள் வெளியிட்டுவைக்க கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவசக்தி ஆனந்தன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

மன்னார் எழுத்தாளர்களில் பெரும்பாலானோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் துளிர்விடும் துயரங்களும் நம்பிக்கைகளும் எனும் கவிதைநூலின் மதிப்பீட்டுரையினை ஊடகவியலாளர் திரு.பொ.மாணிக்கவாசகம் அவர்கள் நிகழ்த்தினார்.

வெற்றிச்செல்வியின் ஏனைய நூல்கள் பற்றிய உணர்வுப் பகிர்வுகளையும், பார்வைப் பகிர்வுகளையும் நாவலாசிரியர் திரு.எஸ்.ஏ.உதயன், சைபர்சிற்றி பதிப்பக உரிமையாளர் திரு.சதீஸ், எழுத்தாளர் கானவி, கவிஞர் வேல் லவன் ஆகியோர் நிகழ்த்தினர்.

ஏற்புரை மற்றும் நன்றியுரையினை நூல்களின் ஆசிரியர் செல்வி வெற்றிச்செல்வி அவர்கள் நிகழ்த்தினார்.

1 2 3 4 5 6 7 8 9 10