வெளிநாட்டில் ப ரிதாபமாக இ றந்த இளைஞர்கள் : கிறிஸ்துமஸ் கொண்டாடிவிட்டு திரும்பிய போது நடந்த து யரம்!!

665

இளைஞர்கள்..

இந்தியாவை சேர்ந்த இளைஞர்கள் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய போது விபத்து ஏற்பட்டு இருவரும் சம்பவ இடத்திலே பரிதாபமாக உ யிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவை பூர்வீமாக கொண்டவர்கள் ரோஹித் கிருஷ்ணகுமார் (19), சரத் குமார் (21). இவர்கள் இருவரின் குடும்பத்தினரும் துபாயில் வசித்து வருகின்றனர்.

பள்ளி படிப்பை துபாயில் முடித்த இவர்கள் இருவரில் ரோஹித் கிருஷ்ணகுமார் பிரித்தானியாவில் உள்ள பல்கலைக்கழகத்திலும், சரத் குமார் அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்திலும் படித்து வந்துள்ளார்.

இதையடுத்து கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடுவதற்காக விடுமுறையில் இருவரும் சமீபத்தில் துபாய்க்கு வந்துள்ளனர்.

நேற்றிரவு இருவரும் கிறிஸ்துமஸ் விருந்து ஒன்றிற்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து காரில் வீடு திரும்பியபோது ஏற்பட்ட ப யங்கர விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தால் இருவரின் குடும்பத்தினரும் மிகுந்த வேதனையில் உள்ளனர்.