முறியும் தருவாயில் த்ரிஷா – ராணா காதல்!!

460

Trisha-Rana

நடிகை த்ரிஷாவுக்கும் அவரது காதலர் ராணாவுக்கும் இடையே பிரச்சினை என்றும், அவர்களின் காதல் முறியும் தருவாயில் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

த்ரிஷாவுக்கு எப்பொழுது கல்யாணம் என்று தான் பலரும் கேட்கின்றனர். அவரது அம்மா உமாவும் தனது மகளுக்கு சின்சியராக மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே த்ரிஷாவும், தெலுங்கு நடிகர் ராணாவும் காதலிப்பதாக வேறு பல காலமாக கூறப்படுகிறது.

வெளிநாட்டில் நடந்த விருது விழா ஒன்றில் த்ரிஷாவும், ராணாவும் ஓவர் நெருக்கமாக இருந்தது பெரிதாக பேசப்பட்டது. மேலும் அவர்கள் இருவரும் கோவாவில் ஒன்றாக சுற்றியதும் அவர்கள் காதலர்கள் தான் என்பதை உறுதிபடுத்தின.

ராணாவுக்கும் த்ரிஷாவுக்கும் இடையே காதலும் நெருக்கமும் ஒரு பக்கம் இருந்தாலும் அவர்கள் பிரிந்துவிட்டார்கள் என்ற செய்தியும் பலமுறை வந்துவிட்டது.

த்ரிஷாவுக்கும், ராணாவுக்கும் இடையே பிரச்சினை என்றும், அவர்களின் காதல் முறியும் நிலையில் உள்ளது என்றும் தற்போது கூறப்படுகிறது.

முன்பெல்லாம் விருது விழாக்களுக்கு ராணாவுடன் கைகோர்த்து வரும் த்ரிஷா தற்போது தனியாக வருகிறாராம். ஆனால் இது குறித்து இருவருமே வாய் திறக்க மாட்டேன் என்று உறுதியாக உள்ளனர்.

ராணா தற்போது எஸ்.எஸ். ராஜமவுலியின் பாகுபலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் நடிக்கும் அனுஷ்காவுடன் சேர்த்தும் அவரது பெயர் அடிபட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.