இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் சவுரவ் கங்குலிக்கு மேலும் ஒரு டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர்களில் ஒருவர் தான் சவுரவ் கங்குலி.
இரண்டாண்டுகளுக்கு முன் கங்குலிக்கு, அசாம் பல்கலைகழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இந்நிலையில் மேற்குவங்கத்தின் சிப்பூர், பெங்கால் பொறியியல் கல்லூரி டாக்டர் பட்டம் வழங்க இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணிக்கான கங்குலியின் பங்களிப்பை பாராட்டி வழங்கப்படுகிறது. பெப்ரவரி 25ம் திகதி நடைபெற உள்ள கல்லூரியின் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கல்லூரியின் வேந்தரும் மாநில ஆளுநருமான எம்.கே. நாராயணன், இப்படத்தை வழங்குவார்.





