வவுனியா பள்ளிவாசல்களில் சூரிய கிரகணத் தொழுகை!!

612

சூரிய கிரகணத் தொழுகை

சூரிய கிரகணத் தொழுகை வவுனியா பண்டாணிச்சூர் ஜம் இய்யதுல் உலமா பள்ளிவாசலில் இன்று (26.12.2019) காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது. சூரிய கிரகணத் தொழுகையில் 50க்கு மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒரே நேரத்தில் வருவதே சூரிய கிரகணம் உண்டாக காரணம்.

அப்போது பூமி, சூரியன் ஆகிய இரண்டுக்கும் நடுவில் வரும் சந்திரன் சூரியனை பூமியில் இருந்து பார்க்க முடியாதபடி மறைக்கும். சூரிய கிரகணம் வளைவு சூரிய கிரகணம் ( annular solar eclipse ) என்றும் சொல்லப்படுகிறது.