மக்களவை தேர்தலில் போட்டியிடவுள்ள தேவயானியின் தந்தை!!

479

Devyani

மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று தேவயானியின் தந்தை உத்தம் கோப்ரகடே அறிவித்துள்ளார். அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தேவயானியின் தந்தை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.

இவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதாக தவல்கள் வெளியாகியுள்ளன, இதுகுறித்து கோப்ரகடே கூறுகையில், பல்வேறு கட்சிகளுடன் இதுபற்றி பேசி வருவதாகவும், எந்த கட்சியில் சேருவது என்பதை சரியான நேரத்தில் அறிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தனது மகள் தேவயானியின் இரண்டு குழந்தைகளை இந்தியாவிற்கு கொண்டு வருவது பற்றி கேட்டபோது அடுத்த மாதம் டெல்லி வரும் குழந்தைகள் டெல்லியில் படிப்பை தொடருவார்கள் என்று பதிலளித்துள்ளார்.