வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புகளுக்காக சென்று திரும்புவோரிடம் கொள்ளையிடும் கும்பலைச் சேர்ந்த நால்வரை பொலிஸார் நேற்று புதன்கிழமை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் கட்டுநாயக்க மற்றும் புறக்கோட்டை பஸ் நிலையத்தில் காத்திருந்தே இவ்வாறான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களிடமிருந்து கார், ஆட்களை மயக்கும் குளிசைகள் 6, வெளிநாட்டு சாறிகள், புகைப்படக் கருவி, வெளிநாட்டு பணம் உள்ளிட்டவையே மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்தேகநபர்கள் நால்வரையும் இன்று வியாழக்கிழமை மஹர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.