வடக்கு மக்களின் பிரதான புகையிரத நிலையமாக வவுனியா புகையிரத நிலையம் செயற்படுகின்றது. நாள் ஒன்றிற்கு ஆயிரக்கணக ்கான பிரயாணிகள் வவுனியா ஊடாக தமது பயணத்தை மேற்கொள்கின்றனர்.
கொழும்பிற்கும், கிளிநொச்சிக்கும் இடையில் பிரதான மார்க்கமாக வவுனியா காணப்படுகின்றது. வவுனியாவிலிருந்து கொழும்பிற்கு தினமும் நான்கு புகையிரத சேவைகளும் ஞாயிற்றுக் கிழமைகளில் மேலதிகமாக ஒரு சேவையும் காணப்படுகின்ற அதேவேளை வவுனியாவிலிருந்து தினமும் கிளிநொச்சிக்கு மூன்று சேவைகளும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மேலதிகமாக இரு சேவைகளும் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் புகையிரத நேர அட்டவணையில் குறிப்பிட்ட நேரத்திற்கு புகையிரதங்கள் வராத காரணத்தால் வவுனியா புகையிரத நிலையத்தில் காத்திருக்கும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றார்கள்.
சில நேரங்களில் சில மணித்தியாலங்கள் வரை புகையிரதங்கள் தாமதமாக வருவதாகவும் அதனால் தாங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி ஏற்படுவதாகவும் இவ் விடயத்தில் உரிய அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
-பாஸ்கரன் கதீசன்-