சிக்னலை மீறி காரை ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்திய நாய்!!

734

Dog

அமெரிக்காவில் தற்செயலாக காரை இயக்கிய வளர்ப்பு நாய் ஒன்று, சிகப்பு விளக்கு சிக்னலை தாண்டிச் சென்று எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.

ஜாசோன் மார்டினெஸ் என்பவர் தனது செல்லப் பிராணியான நாயுடன் கடைக்குச் சென்றார். அப்போது நாயை காருக்குள் வைத்து விட்டு கடைக்கு சென்றிருந்த போது நாய் எதிர்பாராதவிதமாக கியரை போட்டு காரை இயக்கிவிட்டது.

இதனால் கார் கட்டுப்பாடு இன்றி ஓடி சிகப்பு விளக்கு சிக்னலை தாண்டி சென்றது. எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் அதை ஓட்டி வந்த பெண்ணுக்கு காயம் ஏற்பட்டது.

காயமடைந்த பெண் தனக்கு காயமடைந்ததைக் கூட பெரிதாக எடுத்துக் கொள்ள முடியாத வகையில் கார் ஓட்டுநர் இருக்கையில் நாய் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனார்.