சிரஞ்சீவி மகன் நடிகர் ராம்சரண் தேஜா மீது ஆபாசப்பட வழக்கு!!

1331

Ramsaranநடிகர் சிரஞ்சீவியின் மகனும் தெலுங்குப்பட முன்னணி கதாநாயகனுமான ராம்சரண்தேஜா நடித்த எவடு என்ற படம், கடந்த 12ம் திகதி வெளியானது. நடிகைகள் ஸ்ருதி ஹாசன், எமி ஜக்சன் ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர்.

வம்சி பய்டிபள்ளி இயக்கி உள்ள இப்படத்தின் சுவரொட்டிகள், ஆபாசமாக இருப்பதாக கர்நூல் மாவட்டத்தைச் சேர்ந்த நாகேந்திர பிரசாத் என்பவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், ராம்சரண்தேஜா உள்பட 10 பேர் மீது இ.பி.கோ. மற்றும் பெண்களை அநாகரீகமாக வெளிப்படுத்துவதை தடை செய்யும் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.