ஒழுக்கமீறல்களில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை : பொலிஸ் மா அதிபர்!!

513

Policeஒழுக்க மீறல்களில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களை தடுத்து மக்களுக்கு அச்சமின்றி வாழக்கூடிய பின்னணியை உருவாக்க பொலிஸார் அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள்.

கடந்த ஆண்டில் சிறந்த முறையில் சேவையாற்றிய 367 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பணப் பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களுடன் 14 சிவிலியன்களுக்கும் பணப் பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.

இதற்காக 74,76,300 ரூபா செலவிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இவ்வாறு பொலிஸாரை ஊக்குவிப்பதற்காக 1400 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.



தொடர்ச்சியாக இவ்வாறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.