கடைசியாக ஆட்டோவில் ஏறிய இளம்பெண் 9 நாட்களை கடந்தும் மாயம் : உதவி கேட்டு கெஞ்சும் பெற்றோர்!!

591

இளம்பெண்

ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஐதராபாத் இளம்பெண், மாயமாகி 9 நாட்களை கடந்திருக்கும் நிலையில் அவருடைய பெற்றோர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

ஐதராபாத்தை சேர்ந்த 34 வயதான ரோஹிதா குத்துரு என்கிற இளம்பெண், தனது நண்பர்கள் இருவருடன் வாடகைக்கு வீட்டில் தங்கியபடியே ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த டிசம்பர் 26, 2019 அன்று பிற்பகல் 3:15 மணியளவில், கச்சிபவுலி பகுதியில் விப்ரோ அருகே ஒரு ஆட்டோவில் இறுதியாக ஏறி சென்றுள்ளனர்.

ஆனால் அதன் பிறகு எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. அப்பகுதியில் போதுமான சிசிடிவிகளும் இல்லாத காரணத்தால் கண்டுபிடிக்க முடியாமல் பொலிஸாரும் திணறி வருகின்றனர்.

இந்த நிலையில் சோகத்தில் மூழ்கியிருக்கும் இளம்பெண்ணின் பெற்றோர், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.