முதல் இன்னிங்சில் 428 ஓட்டங்களை விளாசியது இலங்கை அணி!!

534

Dilruwanபாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுக்களை இழந்து 428 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், தனது முதல் இன்னிங்சை இடைநிறுத்திக் கொண்டுள்ளது இலங்கை அணி.

நேற்று முன்தினம் துபாயில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இலங்கை சார்பில் டில்ருவன் பெரேரா 95 ஓட்டங்களையும், அஞ்சலோ மத்தியூஸ் 91 ஓட்டங்களையும் குமார் சங்கக்கார 52 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடும் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 19 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.