யாழில் இரு மகள்மாரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய தந்தை!!

547

Abuseதந்தை ஒருவர் தன்னுடைய இரு பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் அளவெட்டிப் பகுதியில் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

தனது 13, 14 வயதுடைய இரு பிள்ளையையும் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக தெல்லிப்பழை பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த தகவலுக்கமைய தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர் யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இரு சிறுமிகளும் நீதிமன்றக் கட்டளைக்கமைய வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.