மத்திய கிழக்கில் நீடிக்கும் ப தற்றம் : டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள அறிவிப்பு!!

412

ட்ரம்ப் விடுத்துள்ள அறிவிப்பு

உலக நாடுகள் ஈரானை தனிமைப்படுத்த வேண்டும் எனவும், ஈரான் மீது மேலும் பொருளாதார தடைக்கள் விதிக்கப்படும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் போ ர் ப தற்றம் வலுப்பெற்றுள்ளது.

ஈரான் இராணுவ தளபதி சுலைமானி கொ ல்லப்பட்டதற்கு அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் ப திலடி கொடுத்தது. இதனையடுத்து இருநாட்டு படையினரும் பரஸ்பர ப திலடி மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் மேற்கொண்ட பதிலடியில் அமெரிக்க படைவீரர்கள் 80 பேர் ப லியானதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், டொனால்ட் ட்ரம்பு இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,

“ஈராக்கில் ஈரான் நடத்திய ஏவுகணை வீச்சில் அமெரிக்கர்களுக்கு எவ்வித பா திப்பும் ஏற்படவில்லை. இராணுவ தளம் மட்டும் சிறிது சே தமடைந்துள்ளது.

அமெரிக்காவுக்கு அ ச்சுறுத்தலாக இருந்த ப யங்கரவாதிகள் மீது ப திலடி நடத்த திட்டமிடப்பட்டது. ஈரான் தனது ஆணு ஆ யுத கனவை கைவிட வேண்டும். நான் ஜனாதிபதியாக இருக்கும் வரை ஈரான் அணு ஆ யுதங்களை வைத்திருக்க அனுமதிக்க மாட்டேன்.

ப யங்கரவாதத்தை ஊக்குவிப்பதில் ஈரான் முன்னிலையில் உள்ளது. உலக நாடுகள் ஈரானை தனிமைப்படுத்த வேண்டும். ஈரான் மீது மேலும் பொருளாதார தடைக்கள் விதிக்கப்படும். உள்நாட்டில் மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் ப யங்கரவாதிகளை வளர்த்து வருகிறது. ஈரானுக்கு எதிராக இ ராணுவத்தை, ஏ வுகணைகளை பயன்படுத்த விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.