பிரசன்னாவுக்கு முத்தமிட்ட ஓவியா!!

441

Oviya

களவாணி என்ற ஹிட் படத்தில் அறிமுகமானாலும் ஓவியாவுக்கு அதற்கு பிறகு எந்த படமும் சரியாக அமையவில்லை. அதிலும் மன்மதன் அம்பு படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தனது நாயகி இமேஜுக்கு அவரே வேட்டு வைத்துக் கொண்டார்.

2013ம் ஆண்டுதான் அவருக்கு கொஞ்சம் விளக்கேற்றி வைத்திருக்கிறது. ஜில்லுன்னு ஒரு சந்திப்பு, மூடர்கூடம், மதயானைக்கூட்டம் என்ற மூன்று படத்தில் நடித்தார். அதில் ஜில்லுன்னு ஒரு சந்திப்பு தவிர மற்ற படங்கள் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது.

இதனால் புதிய உற்சாகத்தோடு 2014ம் ஆண்டில் வலம் வர இருக்கிறார். தற்போது மலையாள சாப்பாகுரிசு படத்தின் தமிழ் ரீமேக்கான புலிவால் படத்தில் நடித்து வருகிறார்.

சாப்பாகுரிசு படத்தில் ரம்யா நம்பீசன் நடித்த முத்த காட்சி அங்கு அப்போது ஹொட் டாபிக். இப்போது ரம்யா நடித்த கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஓவியாவும் அதே மாதிரி பிரசன்னாவுடன் முத்தக் காட்சியில் நடித்திருக்கிறார்.

சாப்பாகுரிசு படத்தை 10 தடவையாவது பார்த்திருப்பேன். அதுல வர்ற கிஸ்சிங் சீன் பற்றி எனக்குத் தெரியும். தெரிஞ்சுதான் நடிக்க ஒத்துக்கிட்டேன். ரம்யாவும் என்னை மாதிரி ஹோம்லியா நடிக்கிறவங்கதான். அவுங்களே கிஸ் பண்ணி நடிச்சிருக்குறப்போ நான் நடிக்க கூடாதா. அந்த காட்சி நிச்சயமாக எந்த உணர்ச்சியையும் தூண்டாது நெகிழ்ச்சியாத்தான் இருக்கும் என்கிறார் ஓவியா