வவுனியாவில் விஷேட ரோந்து நடவடிக்கையில் இராணுவத்தினர்!!

540

வவுனியாவில்

வவுனியாவில் இன்று காலை முதல் நகர் பகுதி மற்றும் சுற்று வீதிகளில் திடீர் ரோந்து நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது வவுனியா நகர் பகுதியில் ரோந்து நடவடிக்கையினை மேற்கொண்டதுடன், திடீரென வவுனியா, குளக்கட்டு வீதியூடாக பூந்தோட்டத்தை நோக்கி சென்றுள்ளனர்.

இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே அப்பகுதிக்கு இராணுவத்தினர் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

-தமிழ்வின்-