பிரிட்டன் மருத்துவமனைகளுக்கு மருத்துவர்கள் தேவைப்படுவதால் இந்தியாவிலிருந்து மருத்துவர்களை தெரிவு செய்ய அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
பிரிட்டனில் உள்ள மருத்துவமனைகளில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது, கூடுதலாக 300 மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர். இதனையடுத்து முதற்கட்டமாக இந்தியாவிலிருந்து 50 மருத்துவர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.
இதுகுறித்து பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சர் ஏர்ல் ஹவ் கூறுகையில், பிரிட்டனை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் வேலை அழுத்தம் காரணமாக விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரிவதை தவிர்க்கின்றனர்.
இதனால் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகிறது, எனவே இந்தியா உட்பட வெளிநாடுகளிலிருந்து மருத்துவர்களை தெரிவு செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்காக விசா விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரவும் அரசு திட்டமிட்டுள்ளது.