சிரிய கலவரத்தில் இரண்டு வாரத்தில் சுமார் 1069 பேர் பலி!!

485

Syriaசிரியாவில் நடைபெற்றுவரும் கலவரத்தால் 2 வார காலத்தில் சுமார் 1069 பேர் பலியானதாக மனித உரிமை நிறுவனம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி பஷார் ஆல்-ஆசாத்துக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் புரட்சி படைக்கும், இராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.

இந்த நிலையில் வடக்கு சிரியாவில் புரட்சி படையினருக்கும், ஈராக்கை சேர்ந்த ஜிகாதி மற்றும் லேவந்த் தீவிரவாத அமைப்புக்கும் இடையே கடும் சண்டை நடைபெறுகிறது.

கடந்த ஒரு வாரத்தில் அதாவது 3ம் திகதி முதல் 11ம் திகதி வரை நடந்த தாக்குதல்களில் 1000 பேருக்கு மேல் பலியாகி உள்ளதாக பிரிட்டனை சேர்ந்த மனித உரிமை நிறுவனம் தகவல் அளித்துள்ளது.