இலங்கை மாணவிகள்

அஸர்பைஜானில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்ட விஷ வாயுவை சுவாசித்ததில் சிக்கி உ யிரிழந்த 3 இலங்கை மாணவிகளின் ச டலங்கள் நேற்று நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

கட்டார் விமான நிலையத்தில் இருந்து விசேட விமானத்தின் மூலம் ச டலங்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக உ யிரிழந்த இரண்டு சகோதரிகளின் தந்தையான நிஷான் சஞ்ஜீவ தெரிவித்துள்ளார்.

அஸர்பைஜானில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி பயின்று வந்த மாணவிகள், தீ விபத்தில் விஷ வாயுவை சுவாசித்தமையினால் உ யிரிழந்தனர்.

பிலியந்தலயை சேர்ந்த 23 வயதுடைய மல்ஷா சன்தீபனி, அவரது சகோதரியான 21 வயதுடைய தாரகி அமாயா மற்றும் கடுவெல பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய அமோத்யா மதுஹன்சி ஆகிய மூவருமே உ யிரிழந்தனர்.

இவர்களின் இறுதிக் கிரியைககள் ஹோமாகம, தியகம மலர்சாலையில் நடைபெறும் என மாணவிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.




