காதலனுக்காக போலி கடவுச்சீட்டில் பாகிஸ்தான் சென்ற இந்தியப் பெண்!!

661

Loveஇணையத்தின் மூலம் பழகிய காதலனை சந்திக்க, இந்தியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலி கடவுச்சீட்டில் பாகிஸ்தான் சென்றுள்ளார்.

அவரை அதிகாரிகள் நாடு கடத்தினர். குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் நகிதா ரமேஷ் (20). பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் முல்தான் நகரில் வசிப்பவர் அசார்.

இருவரும் இணையத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து பேசி வந்தனர். ஒரு கட்டத்தில் அசார் மீது காதல் வசப்பட்டார் நகிதா. இந்நிலையில் தோகாவில் இருந்து விமானத்தில் லாகூர் வந்தார்.

அதிகாரிகள் அவருடைய கடவுச்சீட்டு உட்பட ஆவணங்களை சரி பார்த்தனர். அப்போது, நகிதா போலி கடவுச்சீட்டில் லாகூர் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நிம்ரா என்ற பெயரில் பாஸ்போர்ட் வைத்திருந்தார் நிகிதா.

உடனடியாக அவரை தனியாக அழைத்து சென்று பொலிசார் விசாரித்தனர். அப்போது இணையத்தில் அறிமுகமான அசாரை சந்திக்க வந்ததாகவும் தான் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டதாகவும் நகிதா தெரிவித்தார்.

அவர் சொல்வது உண்மையா என்று பொலிசார் தீவிரமாக விசாரித்தனர். விமான நிலையத்தில் நிகிதாவை வரவேற்க அசாரும் அங்கு வந்திருந்தார்.

அவரையும் பொலிசார் விசாரித்தனர். பின்னர் நிகிதா சொல்வது உண்மை என்று தெரிய வந்தது. இதையடுத்து குடியேற்று துறை அதிகாரிகள் நகிதாவை மீண்டும் தோகாவுக்கு நாடு கடத்தினர். அசாரையும் விடுவித்தனர்.

அதன்பின் ஏமாற்றத்துடன் அசார் முல்தான் திரும்பி சென்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

போலி கடவுச்சீட்டில் வந்த நிகிதாவை ஏன் கைது செய்யவில்லை என்று நிருபர்கள் கேட்டதற்கு, பாகிஸ்தான் சட்டப்படி, போலி ஆவணங்களில் வரும் எல்லோரையும் நாடு கடத்தி வருகிறோம் என்றனர்.