உலக கிண்ணத் தொடருக்கான 20- 20 போட்டியின் இந்திய உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி சார்பில் உலக கிண்ண 20–20 தொடர் வருகிற மார்ச் மாதம் 16ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 6ம் திகதி வரை வங்கதேசத்தில் நடைபெற உள்ளது. இதற்கான 30 வீரர்கள் கொண்ட உத்தேச இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
வழக்கம் போல் மூத்த வீரர்களான ஷேவாக், கம்பீர் இருவரும் சேர்க்கப்படவில்லை. டெல்லி அணியின் சகலதுறை வீரர் ரஜத் பாட்யாவுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது, இதுவரை 104 20–20 போட்டிகளில் விளையாடி, 859 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
தவிர கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சம்சனுக்கு இடம் கிடைத்துள்ளது.
ஐபிஎல்லில் ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக விளையாடியவர், ஆசிய கிண்ணத்தின் இறுதி போட்டியில்(19) சதம் கடந்து, அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார்.
தவிர இளம் இந்திய அணியின் அணித்தலைவரான உன்முக்த் சந்த், ஐதராபாத் வீரர் கரண் சர்மாவும் சேர்க்கப்பட்டனர்.
உத்தேச அணி விபரம்: டோனி, ஷிகர் தவான், ரோகித் சர்மா, கோலி, ரெய்னா, ரகானே, ராயுடு, தினேஷ் கார்த்திக், ஜடேஜா, அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, வினய் குமார், ஸ்டூவர்ட் பின்னி, மோகித் சர்மா, கேதர் ஜாதவ், யுவராஜ் சிங், அமித் மிஸ்ரா, ரஜத் பாட்யா, சஞ்சு சாம்சன், ஈஷ்வர் பாண்டே, உமேஷ் யாதவ், உன்முக்த் சந்த், மன்தீப் சிங், ஹர்பஜன் சிங், வருண் ஆரோன், நதீம், பார்த்திவ் படேல், கரண் சர்மா.





