குழந்தை பெற்றெடுத்த கன்னிகாஸ்திரி!!

457

Sisterஇத்தாலியில் கன்னிகாஸ்திரி ஒருவர் குழந்தை பெற்றெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாலியின் மையப்பகுதி நகரான ரியெட்டியிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.

எல் சால்வடோரைச் சேர்ந்த 32 வயது கன்னிகாஸ்திரீ தான் கர்ப்பமாக இருப்பதாக தனக்குத் தெரிந்திருக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு வயிற்று வலி வந்திருப்பதாக கருதி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது தான் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தனக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு அவர் பிரான்சிஸ் என்று பெயரிட்டிருக்கிறார்.