கவர்ச்சியாக நடிக்க தயார் என்று ஹன்சிகாவுக்கு போன படவாய்ப்புகளை தமன்னா பறித்து வருகிறார். இதனால் இருவருக்கும் பனிப்போர் நடக்கிறது.
தமன்னாவும், ஹன்சிகாவும் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளாக உள்ளனர். ஹன்சிகா கவர்ச்சியாக நடிக்க தயக்கம் காட்டுகிறார். நிறைய இயக்குனர்கள் நல்ல கதைகளுடன் அவரை அணுகி கால்ஷீட் கேட்கின்றனர்.
கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்றும் நிர்ப்பந்திக்கிறார்கள். அதை ஏற்க மறுப்பதால் தமன்னா அந்த இயக்குனர்களுக்கு கவர்ச்சியாக நடிக்க தயார் என்று தூது அனுப்பி படத்தை கைப்பற்றிக் கொள்கிறாராம்.
இப்படி ஹன்சிகாவுக்கு வந்த நிறைய படங்கள் தமன்னா கைக்கு மாறியுள்ளது. அஜித் ஜோடியாக நடித்த வீரம் படம் ஹிட்டானதால் தமன்னா மார்க்கெட் மேலும் எகிறியுள்ளது. ஹன்சிகாவிடம் கதை சொன்ன பல இயக்குனர்கள் தமன்னா பக்கம் தாவியுள்ளனர். கவர்ச்சியால் ஹன்சிகாவை வீழ்த்திவிட்டார் என்கின்றனர்.
இதனால் கவர்ச்சிக்கு மாறலாமா என்ற யோசனையில் இருக்கிறார் ஹன்சிகா. ஹன்சிகா தற்போது அரண்மனை, மான் கராத்தே படங்களில் நடித்து வருகிறார். இரண்டு தெலுங்கு படங்களும் கைவசம் உள்ளன. தமன்னா ஆறு படங்களில் நடிக்கிறார்.





