வவுனியாவில் வடமாகாண ஆளுனருக்கு கெளரவிப்பு நிகழ்வு!!

542

ஆளுனருக்கு கெளரவிப்பு நிகழ்வு

வவுனியாவில் வடக்கு மாகாண ஆளுநருக்கு கெளரவிப்பு நிகழ்வு ஒன்று இன்று (21.01.2020) மாலை இடம் பெற்றது.

வவுனியா தேக்கவத்தை கிராமத்தில் நடைபெற்ற இந்நிகழ்வை வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையின் உப தலைவர் வசந்த ராஜகருணா தலைமையில் நடைபெற்றது.

கிராமத்திற்கு வருகை தந்திருந்த வடக்கு மாகாண ஆளுநர் திருமதி.சாள்ஸ் அவர்களுக்கு மாலை அணிவித்து கண்டிய நடனத்துடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கௌரவம் வழங்கப்பட்டது.

நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், பாடசாலைகளின் குறைபாடு மற்றும் வைத்தியசாலையிலிருக்கும் குறைபாடுகள் உடனடியா தீர்த்து வைக்கப்படும் அத்துடன், வாழ்வாதாரப் பிரச்சனைகள் வேலைவாய்ப்பு பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்படும். இன, மத, வர்க்க வேறுபாடுகளுக்கு அப்பால் மக்களுக்கு சேவை வழங்கப்படும் என தெரிவித்தார்.