24 ஓட்டங்களால் நியூசிலாந்திடம் வீழ்ந்தது இந்திய அணி!!

536

IND

இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 24 ஓட்டங்களால் நியூசிலாந்து அணி வெற்றியீட்டியுள்ளது.

நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இதன்படி நேப்பியரில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற முதலாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா, நியூசிலாந்து அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

இதன்படி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய பந்து வீச்சாளர்களை பதம் பார்த்த நியூசிலாந்து, 7 விக்கெட்டுக்களை இழந்து 292 ஓட்டங்களை விளாசியது.

அந்த அணி சார்பில் வில்லியம்சன் 71 ஓட்டங்களையும், அண்டர்சன் ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். இந்திய அணி தரப்பில் முஹம்மத் சமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 293 என்ன வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்தியா சார்பில் விராத் ஹோலி அபாரமாக துடுப்பெடுத்தாடி 123 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

எனினும் மற்றைய வீரர்கள் எவரும் அரைச் சதம் கூட பெறாதநிலையில் வெளியேற, 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 268 ஓட்டங்களை மட்டுமே எடுத்து தோல்விளைத் தழுவியது இந்தியா.

நியூசிலாந்து அணி தரப்பில் மக்லேங்கன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நியூசிலாந்து சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்ததோடு, சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்திய அண்டெர்சன் இந்தப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவானார்.

இதன்படி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என நியூசிலாந்து முன்னிலையில் உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 22ம் திகதி ஹாமில்டனில் நடைபெறவுள்ளது.