
நேபியரில் நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய தலைவர் தோனி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
கில்கிறிஸ்ட், சங்கக்கார, மார்க் பவுச்சர் ஆகியோருக்குப் பிறகு, ஒருநாள் போட்டிகளில் 300 பேரை ஆட்டமிழக்கச் செய்த விக்கெட் காப்பாளர் என்ற சாதனையை இவர் வசப்படுத்தியுள்ளார்.
மொஅமட் ஷமி வீசிய ஓஃப் ஸ்டம்பிற்கு மிக வெளியே சென்ற பந்தை டிரைவ் ஆட முயன்று எட்ஜ் செய்தா ராஸ் டெய்லர் (55) பந்து தோனியிடம் பிடிகொடுக்கப்பட்டது.
இதுவே அவரது 300வது ஆட்டமிழப்பு ஆகும். மொகமட் ஷமி அபாரமகா வீசி 5 ஓவர்களில் 19 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.





