இலங்கையில் ஓய்வூதியம் பெறுவோருக்கு முக்கிய தகவல் : புதிய நடைமுறை அமுல்!!

243

ஓய்வு ஊதியக்காரர்கள் வாழ்கின்றார்கள் என்பதை உறுதிப்படுத்தும் கைவிரல் அடையாளத்தின் பெறும் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான அனைத்து வசதிகளையும் ஓய்வூதிய கொடுப்பனவு திணைக்களம் நடைமுறைப்படுத்தியுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.ஜயத்த டீ டயஸ் தெரிவித்துள்ளார்.

பிரதேச செயலகங்கள் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு திணைக்களத்தின் அனுமதியை பெற்றுக் கொடுக்கும் தனியார் மற்றும் அரச வங்கிக் கிளைகளில் கைவிரல் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளன.

2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் ஓய்வூதியம் பெற்று ஓய்வூதியத்திணைக்களத்தினால் பதிவு செய்யப்பட்ட முதலாவது ஓய்வூதியத்தை பெறும்போது கைவிரல் அடையாள பதிவை மேற்கொண்ட ஓய்வூதியக்காரர்களுக்கு இந்த நடைமுறை அமுலாகும்.

கைவிரல் அடையாளத்தின் மூலம் ஓய்வூதியோம் பெறுவோரு் வாழ்வதற்கான உறுதியை, கடுவெல, ஹோமாகம, மஹரகம, கெஸ்பாவ, மாவனெல்லை, காலி, கம்பஹா, கண்டி, கடவஸ்சதவ, மீரிகம, அத்தனகலை, மஹர, களுத்துறை, குருநாகல், கொழும்பு, மினுவாங்கொட, ஜாஎல, தம்புள்ளை, உக்குவெல மற்றும் திம்பிரிக்கஸ்யாய ஆகிய பிரதேச செயலக அலுவலகங்களின் பதிவு செய்யலாம்.

ஏனைய பிரதேச செயலகங்களிலும் இந்த வசதிகளை செய்து கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.