இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் மஹேல ஜயவர்தன டெஸ்ட் போட்டிகளில் 11 ஆயிரம் ஓட்டங்களை பெற்ற முதல் இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
பாகிஸ்தான் அணியுடன் சார்ஜாவில் இடம்பெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலேயே இந்த சாதனையை அவர் புரிந்துள்ளார்.
சர்வதேச ரீதியில் இந்த மைல் கல்லை பெறும் எட்டாவது வீரராகவும் மஹேல ஜயவர்தன திகழ்கிறார். 141 வது டெஸ்ட் போட்டியில் அவர் இந்த சாதனையை பெற்றுள்ளார்.
இந்த நிலையில் சர்வதேச ரீதியில் 11 ஆயிரம் ஓட்டங்களை கடந்தவர்களின் வரிசையில் மஹேல ஜயவர்தனவுடன், மேற்கிந்திய தீவுகளில் சிவ்நரேன் சந்திரபோல் மாத்திரமே தற்போது சர்வதேச போட்டிகளில் விளையாடுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.





