கொரோனா வைரஸின் தாக்கம்

கொரோனா வைரஸ் அ ச்சம் காரணமாக பாடசாலைகள் மூடப்படமாட்டாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

பாடசாலைகள் மூடப்படுவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை. பாடசாலைகளில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விளையாட்டுப் போட்டிகளை நிறுத்துவதற்கும் கல்வி அமைச்சு தீர்மானிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கமானது முதன் முதலில் சீனாவிலேயே ஆரம்பமாகியிருந்த நிலையில் தற்போது இலங்கை வரையில் அதன் தாக்கம் நகர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




